கணக்கியல் தொழில்நுட்ப படிப்பு இலவச சேர்க்கை
துவக்கம்
புதுச்சேரியில், கணக்கியல் தொழில்நுட்ப சான்றிதழ்
படிப்பிற்கான சேர்க்கை
நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, புதுச்சேரி சேப்டர் ஆப் காஸ்ட் அக்கவுண்ட்ஸ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
இந்திய
செலவுக் கணக்காளர் நிறுவனம்,
கணக்கியல், தொழில் துறைக்கு
இளைஞர்களை தயார்படுத்திட, குறுகிய
கால வேலைவாய்ப்பு மற்றும்
திறன் சார்ந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி
உருவாக்கப்பட்ட ‘கணக்கியல்
தொழில்நுட்ப வல்லுநர்‘ சான்றிதழ்
படிப்பிற்கு SC., ST., மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க
மத்திய அரசு முன்
வந்துள்ளது.
புதுச்சேரி, அண்ணா நகர், 4வது
குறுக்குத் தெருவில் இயங்கி
வரும், தி இன்ஸ்டியூட் ஆப் கா!ஸ்ட்
அக்கவுண்ட்ஸ் ஆப்
இந்தியா என்ற நிறுவனத்தில், 60 பேருக்கு கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர் படிப்பிற்கு, மூன்று
மாத இலவச பயிற்சி
அளித்திட மத்திய அரசு
அனுமதி அளித்துள்ளது.இப்பயிற்சியில் சேர 10 அல்லது பிளஸ்
2 முடித்தவராகவும், எஸ்.சி.,
எஸ்.டி., சமூகத்தை
சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர வரும்
31ம் தேதி கடைசி
நாளாகும்.
60 பேர்
மட்டுமே சேர்க்கப்பட உள்ளது.இதுதொடர்பாக மேலும் விபரம் வேண்டுவோர் 8525000674 என்ற தொலைபேசி
எண் அல்லது pondicherry@icmi.in என்ற
இணையதள முகவரில் தொடர்பு
கொள்ளலாம்.