TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
பால் பண்ணைத்
தொழில்
இந்தியாவில் தனி நபர் ஒருவர்
பயன்படுத்தும் பாலின்
அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008ல்
இந்தியாவில் 105 மில்லியன் டன்
பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு
பால் உற்பத்தி 2.5 மில்லியன்
டன் அதிகரித்து வருகிறது.
2021 – 2022ல் நாட்டின் பால்
தேவை ஆண்டுக்கு 180 மில்லியன்
டன்னாக இருக்கும் என
மதிப்பிடப்படுகிறது.
இந்த
தேவையை ஈடுகட்ட தற்போதைய
உற்பத்தியை இரு மடங்காக
அதாவது ஆண்டுக்கு 5 மில்லியன்
டன்னாக அதிகரிக்க வேண்டிய
நிலையில் இந்தியா இருக்கிறது.
ஆக,
தேவை இருக்கும் தொழிலில்
இறங்குவது தானே லாபம்
தருவதாக இருக்கும்.
இதற்கு மூலதனம் என்ன தேவைப்படும்?
மனிதர்கள்
தான் இதற்கு மிகப்பெரிய மூலதனம். ஏனென்றால், உங்களுக்கு பால் விற்பனை செய்யும்
ஆட்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் உத்தரவாதம் பெற
வேண்டும்.
காரணம்,
அவர்கள் அதை வேறு
ஒரு பக்கம் விட்டுக்
கொண்டிருப்பார்கள். அவர்களை
உங்கள் பக்கம் தற்போது
தான் முதல் வேலை.
அதற்கு நாலு மாடுகள்
வைத்திருப்பவரை ஐந்தாவதாக
ஒரு மாடு வாங்க
வைத்து, அந்த மாட்டுப்
பாலை எனக்கு கொடுங்கள்
என்று வளைக்க வேண்டும்.
அதன்பிறகு நம்முடைய அணுகுமுறையை வைத்து எல்லா பாலையும்
நமக்கே விற்பனை செய்ய
ஆரம்பித்து விடுவார்.
அவர்கள்
மாடு வாங்குவதற்கான கடனுக்கு
வங்கியில் ஏற்பாடு செய்து
கொடுப்பது. நீங்களே சிலரைத்
திரட்டி குழுவாக வங்கிக்
கடன் வாங்கி கொடுத்து
ஊருக்குள் சிறு பண்ணை
அமைத்துக் கொடுப்பது போன்ற
விஷயங்களை செய்தால் உங்கள்
பால் கொள்முதலுக்கு நல்ல
ஏற்பாடாக அமைந்து விடும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here