TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
SSC தேர்விற்கான கால
அட்டவணை வெளியீடு
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ம் ஆண்டிற்கான SSC தேர்வு கால அட்டவணையை
வெளியிட்டுள்ளது.
அதாவது,
ஒருங்கிணைந்த பட்டதாரி
(நிலை-1)-க்கான தேர்வு
குறித்தான அறிவிப்பு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி
வெளியிடப்படும் எனவும்,
அக்டோபர் 1ம் தேதி
முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், எழுத்துத்
தேர்வு டிசம்பர் மாதத்தில்
நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2)
(முதல் நிலை) தேர்வு
குறித்தான அறிவிப்பு நவம்பர்
5 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், டிசம்பர் 4 ஆம்
தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
எழுத்துத் தேர்வு ஜனவரி–பிப்ரவரி
2023 ல் நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இளநிலை பொாறியாளர் தேர்வு
குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட்
மாதம் 12ம் தேதி
வெளியிடப்படும் எனவும்,
செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நவம்பர்
மாதத்தில் எழுத்து தேர்வு
நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன்,
காவலர் நிலையிலான பணி
குறித்தான அறிவிப்பு டிசம்பர்
10ம் தேதி வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ம்
தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச்–ஏப்ரல்
2023 மாதங்களில் எழுத்து தேர்வு
நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சார்–ஆய்வாளர் பணி
குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட்
10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 30ம்
தேதி வரை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும்,
நவம்பர் மாதம் எழுத்துத்
தேர்வு நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுருக்கெழுத்தாளர் நிலை
சி மற்றும் டி
தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட்
20ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்விற்கு செப்டம்பர் 5ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் எனவும்,
நவம்பர் மாதம் எழுத்துத்
தேர்வு நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன்,
பன்னோக்கு(தொழில்நுட்பம் சாராத)
பணியாளர் தேர்விற்கான அறிவிப்பு
ஜனவரி 12 2023 ல்
வெளியிடப்படும் எனவும்,
பிப்ரவரி 24ம் தேதி
வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும்,
ஏப்ரல் – மே மாதங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SSC அட்டவணை NOTIFICATION: CLICK
HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here