பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றவா்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேசம், தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரா் – வீராங்கனைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் அக்.31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலோ அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்திலோ விண்ணப்பம் செய்யலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.