மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடி வகைகள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி ஆக., 29 முதல் 31 வரை நடக்கிறது.
குழம்பு மிளகாய், சாம்பார், ரசம், கரம் மசாலா, பிரியாணி மசாலா, கறிவேப்பிலை, உடனடி இட்லி கலவை பொடி, முருங்கை கீரை பருப்பு, மீன் மசாலா பொடி தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய லைசென்ஸ் பெறுவது, சிறு, குறுந்தொழில் தொடங்குவது, சந்தைப்படுத்துவது குறித்தும் விளக்கப்படும்.
முன்பதிவுக்கு: 95241 19710.