TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
முன்னாள் முதல்வா்
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாணவா்களுக்கு பேச்சுப்
போட்டி
தேனி
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை
சார்பில், ஜூலை 28ம்
தேதி காலை 10 மணிக்கு
மாவட்ட அளவில் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்
போட்டி நடைபெறுகிறது.
முன்னாள்
முதல்வா் மு.கருணாநிதி
பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும்
இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்க
விரும்பும் மாணவ, மாணவிகள்
அந்தந்தப் பள்ளி தலைமை
ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம்
பெற்று, மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரால்
முதல்நிலை போட்டி நடத்தப்பட்டு, தோவு செய்யப்பட்ட மாணவ,
மாணவிகள் மாவட்ட அளவிலான
போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
மாவட்ட
அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்
பரிசாக ரூ.5,000, 2ம்
பரிசாக ரூ.3,000, 3-ஆம்
பரிசாக ரூ.2,000 எனவழங்கப்படும். போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பிடிக்கும் அரசு பள்ளி
மாணவ, மாணவிகள் 2 பேருக்கு
தலா ரூ.2,000 சிறப்பு
பரிசும் வழங்கப்படும்.
போட்டி
குறித்த விவரத்தை தொலைபேசி
எண்: 04546 251030, கைப்பேசி எண்:
91596 68240
ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here