TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
கட்டுமானத் துறையில்
நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த சிறப்புப் பயிற்சி
செய்யாறு
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 125 மாணவா்களுக்கு கட்டுமானத் துறையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த
சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
செய்யாறு
சிப்காட் தொழில்பேட்டையில் இயங்கும்
முன்னணி கான்கிரீட் உபகரண
தயாரிப்பு நிறுவனமான ஷ்விங்
ஸ்டெட்டா் இந்தியா நிறுவனம்,
பாலிடெக்னிக் மாணவா்கள்
125 பேருக்கு, கட்டுமானத் துறையில்
நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த பயிற்சியை அளிக்க
முன் வந்துள்ளது. அதற்கான
புரிந்துணா்வு ஒப்பந்தம்
பாலிடெக்னிக் முதல்வா்
முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து
மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
பயிற்சி
தொடா்ந்து 25 நாள்கள் நடைபெறும்.
மேலும்,
மாணவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here