தமிழக வேளாண்,
தோட்டக்கலை தேர்வுகளுக்கு சிறப்பு
பயிற்சி
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்க உள்ள
வேளாண்மை, தோட்டக்கலை துறை
அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்புப்
பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக
கோவை மாவட்ட ஆட்சியர்
அவர்கள் அறிவித்துளளார்.
தமிழக
அரசின் துறைகளுக்கு பணியாற்ற
தேவைப்படும் பணியாளர்களை அரசுப்
பணியாளர் தேர்வாணையம் மூலம்
தேர்வு செய்கிறது. ஒவ்வொரு
துறைக்கும் தனித்தனி தேர்வுகள்
மூலம் பணியாளர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். வேளாண்மை
மற்றும் தோட்டக்கலைத் துறை
அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட
ஆட்சியர் அறிவித்துள்ளார்.
TNPSC மூலம்
அரசு வேளாண், தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஏப்ரல்
17ம் தேதி முதல்
19ம் தேதி வரை
தேர்வுகள் நடக்க உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கோவை மாவட்ட
வேலைவாய்ய்பு அலுவலகம்
மூலம் வேளாண் பல்கலையில் சிறப்பு பயிற்சி வகுப்பு
நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வகுப்புகள் பிப்ரவரி இறுதி வாரம்
முதல் தேர்வு நடைபெறும்
வரை இருக்கும். பயிற்சி
வகுப்பில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கும் கலந்து கொள்ளும்
வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களுக்கு 0422-2642388,
9499055938 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம்.