2,222 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட்.,மற்றும் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவ. 30-ஆம் தேதியாகும்.
இத்தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ. 17-ஆம் தேதி காலை 11 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த வகுப்பு தொடா்பான விவரங்களை 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். பட்டதாரி ஆசிரியா் பணியிட தேர்வுக்கு தயாராகுபவா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow