TAMIL MIXER
EDUCATION.ன்
பொங்கல்
செய்திகள்
பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு ரயில்
பொங்கலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. பணிநிமித்தமாக
நகரங்களில்
தங்கியிருப்பவர்கள்
சொந்த
ஊருக்கு
சென்று
பொங்கல்
கொண்டாடுவதை
வழக்கமாக
வைத்துள்ளனர்.
இவர்களின் தேவைகள், கடைசி நேர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை பண்டிகை காலங்களில் இயக்கி வருகிறது. அதன்படி தற்போது தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு
ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல்லில்
இருந்து
கோவைக்கு
பொங்கல்
சிறப்பு
ரயில்
இயக்கப்பட
உள்ளதாக
தெரிவித்துள்ளது.நாளை ஜனவரி 13 வெள்ளிக்கிழமை
முதல்
ஜனவரி
18 புதன்கிழமை
வரை
இரு
மார்க்கங்களிலும்
ஒரு
முன்பதிவில்லாத
எக்ஸ்பிரஸ்
கட்டண
சிறப்பு
பாசஞ்சர்
ரயில்
இயக்கப்பட
உள்ளது.
இந்த ரயில் கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில்
இந்த
ரயில்
பிற்பகல்
2 மணிக்கு
திண்டுக்கல்
ரயில்
நிலையத்தில்
இருந்து
புறப்பட்டு
மாலை
5.30 மணிக்கு
கோவை
ரயில்
நிலையம்
சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் அக்கரைப்பட்டி,
ஒட்டன்சத்திரம்,
சத்திரப்பட்டி,
பழனி,
புஷ்பத்தூர்,
மடத்துக்குளம்,
மைவாடி
ரோடு,
உடுமலைப்
பேட்டை,
கோமங்கலம்,
பொள்ளாச்சி,
கிணத்துக்கடவு,
போத்தனூர்
ஆகிய
ரயில்
நிலையங்களில்
நின்று
செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள்,
2 பார்சல்
பெட்டிகள்
இணைக்கப்பட்டிருக்கும்.மதுரை பயணிகளுக்கு குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் மதுரையில் இருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையலாம்.
அங்கிருந்து திண்டுக்கல்–கோவை சிறப்பு ரயிலில் கோவை வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே
போல்
ஈரோடு,
திருப்பூர்
வழியாக
செல்லும்
நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு 1.20 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் செல்ல முடியும் என குறிப்புக்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.
அதிவிரைவாக கோவை செல்ல விரும்பும் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயணிகள் பயன்படுத்தி கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்
என
தெற்கு
ரயில்வே
அறிவித்துள்ளது.