அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது – அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் எதிர்வரும் 28.02.2023 அன்று காலை 11 மணிக்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் அவர்களின் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மேற்கண்ட வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு, அவர் தெரிவித்துள்ளார்.