TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
ஒரு பாடத்தில்
மட்டும் தோல்வியடைந்த மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு அறிவிப்பு
ஒரு
பாடத்தில் மட்டும் தோல்வியடைந்து (அரியர்) உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல்
தவிக்கும் மாணவர்களுக்காக சிறப்பு
தேர்வை பாரதியார் பல்கலை
அறிவித்துள்ளது.
இதுகுறித்து,பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) கூறியதாவது:
ஒரு
பாடத்தில் மட்டும் தோல்வி
அடைந்து உயர்கல்விக்கு அல்லது
வேலை வாய்ப்பு பெற
முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக இச்சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எழுத்து தேர்வுகளை
மட்டும் எழுத முடியும்.
சிறப்பு தேர்வு, வரும்
அக்., 1 ம் தேதி
காலை, 10.00 முதல், மதியம்,
1.00 மணி வரை நடக்கிறது.
ஒரு பாடத்தில் தோல்வி
அடைந்தவர்கள் மட்டும்
சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கடந்த,
2017-2018 ல், எம்.எஸ்சி.,(சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்), 2019-2020ல்
இளங்கலை, 2020-2021ல்
முதுகலை பயின்ற மாணவர்கள்
தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாணவர்கள்,
www.b–u.ac.in என்ற
இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரும்,
செப்., 15ம் (15.09.2022) தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
பாரதியார் பல்கலை, கோவை
என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow