HomeBlog3ஆம் பாலினத்தவருக்கு ரேஷன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்
- Advertisment -

3ஆம் பாலினத்தவருக்கு ரேஷன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்

Special camps for issuing ration card to 3rd gender

3ஆம் பாலினத்தவருக்கு ரேஷன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்

தமிழக
அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழ், மூன்றாம்
பாலினத்தவர்களுக்கு குடும்ப
அட்டைகள் வழங்க ஆணைகள்
வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்
தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு PHH மின்னணு
குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக, 2022ம் ஆண்டு
ஜனவரி 2ம் சனிக்கிழமை (8ம் தேதி) அன்று
அனைத்து தனி தாசில்தார்கள் மற்றும் அனைத்து வட்ட
வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு
முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில்
சமர்ப்பிக்கப்பட வேண்டிய
ஆவணங்களான புகைப்படம், ஆதார்
அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும்
ஒரு இருப்பிட ஆதாரம்
பெற்று புதிய குடும்ப
அட்டை வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

மேலும்,
வேறு இருப்பிட ஆதாரங்கள்
இல்லாதபட்சத்தில் வீட்டு
வாடகை ஒப்பந்தமே போதுமானதாகும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே
மின்னணு குடும்ப அட்டை
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். மூன்றாம் பாலினத்தவர்கள் சிறப்பு முகாமில் அளிக்கும்
புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்ப ஆவணங்களை சிறப்பு
முகாமிலேயே இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல்
அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பதிவேற்றங்கள் செய்யப்படும்.

எனவே
புதிய மின்னணு குடும்ப
அட்டை கோரும் மூன்றாம்
பாலினத்தவர்கள் சிறப்பு
முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு
கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -