சிறப்பு பி.எட்.,
படிப்புக்கான சேர்க்கை
அறிவிப்பு வெளியாகியுள்ளது
சென்னை
கோட்டூர்புரத்தில் செயல்படும் வித்யாசாகர் கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஸ்பெஷல்
எடுகேஷன் எனப்படும், சிறப்பு
பி.எட்., படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில்
கூறப்பட்டுள்ளதாவது:
பி.எட்.,
ஸ்பெஷல் எடுகேஷன் – மல்டிபிள் டிஸேபிளிட்டீஸ் அண்டு
இன்குளூசிவ் எடுகேஷன் என்ற
பெயரில், சிறப்பு பி.எட்.,
படிப்பில் சேர ஆர்வமுள்ள
மாணவர்கள், எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் இந்த
படிப்பு நடத்தப்படுகிறது. ஏதாவது
பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.தமிழ்நாடு
ஆசிரியர் பயிற்சி பல்கலை
மற்றும் ஆர்.சி.ஐ.,
எனப்படும், இந்திய மறுவாழ்வு
கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற்று,
இந்த பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது.