விவசாயிகளுக்கு தென்னங்கன்று – வேளாண்துறை அழைப்பு
உடுமலை
வட்டாரத்தில், அனைத்து
கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது.
தமிழக
அரசின் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண்மை
வளர்ச்சித்திட்டத்தின் கீழ்,
நிலம் வைத்துள்ள 200 குடும்பங்களுக்கு ஒரு பண்ணை
குடும்பத்திற்கு, மூன்று
தென்னங்கன்றுகள் வரும்,
23ம் தேதி காலை,
10 மணிக்கு வழங்கப்படுகிறது.
கல்லாபுரம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி
பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு சமுதாயக்கூட்ட அரங்கிலும், ஜல்லிப்பட்டி ஊராட்சி
விவசாயிகளுக்கு முத்துலட்சுமி திருமண மண்டபத்திலும் வழங்கப்படுகிறது.
ஒரு
தென்னங்கன்று, விலை
ரூ.60; இதில், அரசு
மானியம் ரூ.50 ஆகும்;
விவசாயிகள் பங்களிப்புத்தொகை ரூ.10
செலுத்த வேண்டும். விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை
நகல், போட்டோ -1, மொபைல்
எண் ஆகியவற்றுடன், இத்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்
விபரங்களுக்கு, உடுமலை
வேளாண் உதவி இயக்குனர்
தேவி – 9944557552 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.