வீடு கட்ட
கடன் பெறும் திட்டத்தில் சில மாற்றங்கள் – அரசு
ஊழியர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
தமிழக
அரசுப்பணியில் உள்ள
ஊழியர்கள் சொந்தமாக வீடு
கட்ட, வாங்க வாங்க
அரசு சார்பில் முன்பணம்
வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, நகர்ப்புற
வளர்ச்சி துறை முதன்மை
செயலர் அனைத்து மாவட்ட
ஆட்சியர்களுக்கு கடிதம்
அனுப்பியுள்ளார்.
அரசு
பணியில் உள்ள ஊழியர்கள்
சொந்தமாக நிலம் வாங்கி
வீடு கட்டவும் அல்லது
கட்டி முடிக்கப்பட்ட வீடு
வாங்கவும் தமிழக அரசு
சார்பில் முன்பணம் வழங்கப்படுகிறது.
இதற்கு
160 கோடி ரூபாய் நிதி
அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முன்பணமாக ரூ.25
லட்சம் வரை வழங்கப்படும்.
வெளி
மாநிலத்தில் வேலை பார்க்கும் ஒரு அரசு ஊழியர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு
வாங்குவது குறித்து புகார்கள்
எழுந்தது. எனவே அதனை
சரி செய்ய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை
முதன்மை செயலர் டி.கார்த்திகேயன் இந்த திட்டம் குறித்த
மாற்றங்கள் பற்றி அறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெளியிட்ட அறிவிப்பில்:
வீட்டுக்கடன் முன்பணம் வழங்கும் திட்டத்தில் சில சிக்கல் இருந்து
வந்த காரணத்தால் தற்போது
அந்த திட்டத்தில் சில
மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
சொந்த வீடு வாங்கும்
அரசு ஊழியர்கள் சொந்த
வீடு வாங்கும் மாவட்டத்தின் ஆட்சியரிடம் அனுமதி கடிதம்
பெற வேண்டும்.
இந்த
மாற்றத்தை நடைமுறைப்படுத்த அனைத்து
மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.