வேலைவாய்ப்பற்றோருக்கு திறன்
பயிற்சி–பிப்.17ம்
தேதி தேர்வு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன்
பயிற்சியுடன் கூடிய
வேலைவாய்ப்பு அளிக்கும்
திட்டத்தின்கீழ், திருவாரூர் மாவட்டத்தில் பயனாளிகள்
தேர்வு முகாம் பிப்.17-ம்
தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர், முத்துப்பேட்டை, நன்னிலம்
ஆகிய வட்டங்களுக்கு ஆட்சியர்
அலுவலகத்திலும், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய வட்டங்களுக்கு மன்னார்குடி குமாரசாமி திருமண மண்டபத்திலும், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய வட்டங்களுக்கு மஞ்சக்குடி சுவாமி தயானந்த கலைக்
கல்லூரியிலும் இம்முகாம்
நடைபெற உள்ளது.
5ம்
வகுப்பு தேர்ச்சி முதல்
பட்டப்படிப்பு, ஐடிஐ,
டிப்ளமோ மற்றும் பி.இ
வரை கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக இப்பயிற்சி வழங்கப்பட
உள்ளது. மேலும், 4 மாத
பயிற்சிக்கு பின்னர், பல்வேறு
தனியார் துறைகளில் 100 சதவீத
வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
முகாமுக்கு வருபவர்கள் தங்களின் சுயவிவரக்
குறிப்பு, ஆதார் கார்டு,
ரேஷன் கார்டு, வாக்காளர்
அடையாள அட்டை, சாதிச்
சான்றிதழ், 3 பாஸ்போர்ட் அளவு
புகைப்படங்கள் மற்றும்
கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.