வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய
திறன்வளர்ப்பு பயிற்சி
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் தீனதயாள்
உபாத்யாய ஊரக திறன்
பயிற்சி திட்டத்தின் கீழ்,
18 வயது பூர்த்தி அடைந்த,
35 வயதுக்கு உட்பட்ட, 10ம்
வகுப்புக்கு மேல் படித்த
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
இதற்கான
சிறப்பு முகாம், 26ம்
தேதி நடக்கிறது. திருப்பூர், பொங்கலுார், அவிநாசி, ஊத்துக்குளி, குடிமங்கலம் மற்றும் பல்லடம்
ஆகிய வட்டாரங்களில் உள்ள
இளைஞர்களுக்கு (இரு
பாலர்களுக்கும்) திருப்பூர் எல்.ஆர்.ஜி.,
மகளிர் கல்லுாரியில்; தாராபுரம்,
குண்டடம், மூலனுார், மடத்துக்குளம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும்
உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு (இரு
பாலர்களுக்கும்) தாராபுரம்
அரசு தொழிற்பயிற்சி மையத்தில்
காலை, 10.00 முதல் மாலை,
3.30 மணி வரை நடக்கிறது.
முகாமில்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வேலை
வாய்ப்புள்ள பயிற்சிகள் பல்வேறு
அரசு அங்கீகாரம் பெற்ற
தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட உள்ளது.
பயிற்சியின் போது, மாணவர்களுக்கு தங்கும்
இட வசதியுடன் இலவச
உணவு, பாடப்புத்தகங்கள், சீருடை,
போக்குவரத்து செலவினங்கள், இலவச இன்டர்நெட் வசதி
ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்களது
கல்வி சான்றிதழ், ஆதார்
அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வருகை
புரிந்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி திறன் பயிற்சி
மற்றும் வேலைவாய்ப்பு பெறலாம்.
விபரங்களுக்கு, 94440 94396 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.