TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்
21ம் நுாற்றாண்டிற்கு தேவையான திறன் பயிற்சி
திட்டம் –
CBSE
மாணவர்களுக்கு 21ம் நுாற்றாண்டிற்கு தேவையான
திறன்களை பயிற்றுவிக்கும் திட்டம்
தொடர்பாக CBSE., ‘யுனிசெப்‘
ஆகிய அமைப்புகள் இடையே
ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
உலகளவில்
அறிமுகமாகி வரும் புதிய
தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப
மாணவர்களை தயார்படுத்த வேண்டிய
சூழல் உள்ளது. இது
குறித்து மத்திய இடைநிலை
கல்வி வாரியமான, CBSE.,
தலைவர் நிதி சிப்பர்
கூறியதாவது:மத்திய அரசின்
புதிய தேசிய கல்விக்
கொள்கையானது கற்றல் என்ற
நிலையில் இருந்து திறன்
பயிற்சிக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் உள்ளது. பள்ளி
அளவிலேயே மாணவர்களுக்கு திறன்
பயிற்சி அளிக்க வேண்டும்
என, கல்விக் கொள்கை
வலியுறுத்துகிறது.
இதையொட்டி,
ஐ.நா., குழந்தைகள் நிதியமான, யுனிசெப் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,
மாணவர்களுக்கு, 21ம்
நுாற்றாண்டிற்கு தேவையான
திறன்கள் பயிற்றுவிக்கப்படும். இது,
மாணவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழிகாட்டியாகவும் விளங்கும்.