திண்டுக்கல்: முன்னாள் படைவீரா்களுக்கு மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு : திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், அவா்கள் விரும்பும் திறன் பயிற்சி பெறவும் மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் முன்னாள் படைவீரா் விருப்பம் தெரிவிக்கும் பயிற்சியை, திண்டுக்கல் மாவட்டத்தில் பெறவதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள வேறொரு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
எனவே, இந்த திறன் பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள திண்டுக்கல்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.