TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்புடன் கூடிய
திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழ்நாடு
மாநில ஊரக மற்றும்
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
சார்பில், ஒன்றியம் வாரியாக
இளைஞர் திறன் திருவிழா
நடக்கிறது.கிராமப்பகுதியைச்சேர்ந்த, 18 முதல்,
35 வயது வரையுள்ள, 10ம்
வகுப்பு முடித்தவர்கள், பிளஸ்
2 தேர்ச்சி பெற்றவர், பெறாதவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய
திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
அரசுத்திட்டங்களில், சுய வேலை
வாய்ப்பு பயிற்சி மற்றும்
வேலை வாய்ப்புடன் கூடிய
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
இளைஞர்
திறன் திருவிழா, வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில்,
26ம் தேதி; தாராபுரம்
ஒன்றியத்தில், 27ம்
தேதி; குண்டடத்தில், செப்.,
2ம் தேதி; குடிமங்கலம் என்.வி., பாலிடெக்னிக்கில், செப்., 3ம்
தேதி நடக்கிறது.
மடத்துக்குளம் தாலுகாவில், செப்., 9ம்
தேதி; அவிநாசி பெண்கள்
அரசு பள்ளியில், 17ம்
தேதி; காங்கயம் அரசு
பள்ளியில், 24ம் தேதியும்
முகாம் நடக்கிறது. காளான்
வளர்ப்பு, மகளிர் டெய்லர்,
அழகு கலை பயிற்சி,
சணல் பைகள் தயாரித்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பழுதுபார்த்தல், அப்பளம்
மசாலா பொருட்கள் தயாரித்தல்;தேனீ வளர்ப்பு, அலங்கார
நகைகள், மொபைல்போன் பழுதுபார்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற
சுய தொழில் பயிற்சியும், பல்வேறு தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர்பவருக்கு, தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகம்
இலவசம். பயிற்சி முடித்த
பிறகு, வேலை வாய்ப்புடன் கூடிய மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்படும்.
தொழில்
துவங்க, கடன் உதவியும்
ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, திறன் பயிற்சியும், சுய
தொழில் பயிற்சியும் பெற்று
பயன்பெறலாம்.
மேலும்
விபரங்களுக்கு, 94440 94396
என்ற எண்களில், மாநில
ஊரக வாழ்வாதார இயக்க
அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow