
ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ள இளைஞர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:
சேலம் மாவட்ட ஊரக இளைஞர்களுக்கு, ‘அட்மா’ திட்டத்தில், ‘அங்கக’ வேளாண்மை(ஆர்கானிக் பார்மிங்) தொடர்பான திறன் வளர்க்கும் பயிற்சி, ஜூலை, 22 முதல், 27 வரை, 6 நாட்கள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள உழவர் பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ளது.இதில் பயிற்சி பெற, ஊரக பகுதிகளில் வசிக்கும், 18 வயது பூர்த்தியடைந்த, 5ம் வகுப்பு படித்துள்ள இளைஞர்கள், 99449 80444, 97895 10248 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
6 நாட்களும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow