தானியங்கி திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்
தொழில் துறை சாா்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் துறை சாா்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டுப் பயிற்சி, எண்முறை உற்பத்தித் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்.டி.டி.எஃப். நிறுவனம் சாா்பில் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர பட்டயப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் புரடொக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் முடித்த 18 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான காலஅளவு 6 மாதமாகும். மேலும், தங்கிப் ும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும், தனியாா் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியைப் பெற http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow