ஆதார் கார்டில்
பிழைகளை திருத்தம் செய்ய
எளிய வழிமுறைகள்
ஆதார்
கார்டில் உள்ள பிழைகளை
திருத்தம் செய்வதற்கு மக்கள்
அனைவரும் இ–சேவை
மையத்தில் காத்து கிடக்கின்றனர். தற்போது அதற்கான எளிய
வழிமுறை வெளியாகியுள்ளது. அதன்படி
https://uidai.gov.in/ என்னும்
தளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து
கொள்ளலாம்.
பெரும்பாலுமான மக்களுக்கு முகவரி பிழை
தான் இருக்கும். தற்போது
அதனை திருத்தம் செய்ய
வேண்டும் என்றால் முதலாவதாக
மேலே குறிப்பிட்டுள்ள தளத்தை
Click செய்யவும்.
பின்பு
அதில் Update your address online என்னும்
ஆப்ஷனை Click செய்யவும்.
பின்பு
அதில் Proceed to update address என்னும்
ஆப்ஷனை Click செய்யவும்.
அடுத்து
வரும் பக்கத்தில் தங்களது
ஆதார் என்னை பதிவிட்டு
send OTP என்னும் ஆப்ஷனை Click
செய்யவும்.
பின்பு
தங்களது பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு ஓர் OTP வரும்.
அதனை அதில் பதிவு
செய்தால் நீங்கள் உங்கள்
ஆதார் கணக்கிற்குள் சென்று
விடலாம்.
பின்பு
Update address by online proof என்னும் ஆப்ஷனை
Click செய்யவும்.
நீங்கள்
உங்களது முகவரியை மாற்ற
வேண்டும் என்றால் அதில்
உள்ள Modify என்னும் ஆப்ஷனை
கிளிக் செய்து அதில்
முகவரியை மாற்ற வேண்டும்.
பின்பு
சரியான முகவரி கொண்ட
சான்றை ஸ்கேன் செய்து
அதில் பதிவேற்றம் செய்து
அதில் Submit என்னும் ஆப்ஷனை
கிளிக் செய்தால் உங்கள்
முகவரி மாற்றம் கோரிக்கை
ஏற்கப்படும்.
இதனை
உறுதிபடுத்தும் வகையில்
உங்களுக்கு ஓர் எண்
வழங்கப்படும். அதனை
வைத்து நீங்கள் தங்களது
ஆதார் ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஆதார்
முகவரி அப்டேட் ஆன
பின்பு தங்களது ஆதார்
கார்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.