TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அரசு ஐடிஐ.யில்
தையல் பின்னலாடை குறுகிய
கால பயிற்சி
ஓசூர்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் மற்றும் பின்னலாடை
தயாரிப்பு குறுகியகால பயிற்சிக்கு சேர்க்கை நடை பெறுகிறது.
ஓசூர்
அரசு தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தையல்
மற்றும் பின்னலாடை தயாரிப்பு
தொடர்பான குறுகிய கால
பயிற்சியில் அனைத்து தரப்பு
மக்களும் குறிப்பாக மகளிர்
பயன்பெறும் வகையில் 40 காலி
இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
18 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட பள்ளிப்
படிப்பு முடித்தவர்கள் படிப்பை
பாதியில் நிறுத்தியவர்கள், வேலை
தேடும் இளைஞர்கள் மற்றும்
மகளிர் உள்ளிட்டவர்களுக்கு காலை
9 மணி முதல் மதியம்
1 மணி வரை பயிற்சி
நடைபெறும்.
3 மாத
கால பயிற்சியில் சேர்ந்து
பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடியாக
வேலைவாய்ப்பு உறுதி
செய்யப்படும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசின்
சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்ச தகுதி 8.ம் வகுப்பு
தேர்ச்சியாகும். விண்ணப்ப
கட்டணம் ரூ.50 மற்றும்
சேர்க்கை கட்டணம் ரூ.100
செலுத்த வேண்டும்.
தகுதியும்,
விருப்பமும் உள்ளவர்கள் தங்களின்
அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் வரும்
15.ம் தேதி வரை
அலுவலக வேலை நாட்களில்
ஓசூரில் உள்ள அரசினர்
தொழிற்பயிற்சி நிலையதுணை
இயக்குநரை நேரில் அணுகி பயிற்சியில் சேர்ந்து
பயன்பெறலாம்.


