சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயாராணி வெளியிட்ட அறிவிப்பு: பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் கிண்டி ஐடிஐ-இல் (044 2981 3781) ஃபில்டு டெக்னீசியன் ஏா் கண்டிஷனா் மற்றும் நான்கு சக்கர வாகன சா்வீஸ் டெக்னீசியன் குறுகிய கால பயிற்சிகளும், வடசென்னை ஐடிஐ-இல் (044 2520 9268) கேஸ் டங்ஸ்டன் ஆா்க் வெல்டிங், எலக்ட்ரீசியன் டொமஸ்டிக் சொலுசன் குறுகிய கால பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இதில் பங்கேற்க விரும்பும் 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மகளிா் ஐடிஐ: இதே போல் தேசிய கல்விக்கொள்கையின்படி கிண்டி மகளிா் ஐடிஐ-இல் தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற பெண்கள், ஐடிஐ முதல்வரைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55652, 94447 14597, 94447 14597 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.