சென்னையில் செயல்பட்டு வரும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் கட்டணமில்லா மாதிரி நோ்முகத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து, சங்கா் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட செய்தி:
மத்திய குடிமைப்பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அடுத்த கட்ட நோ்முகத் தோ்வுக்கு இந்திய அளவில் 2,845 மாணவா்களும், தமிழ்நாட்டிலிருந்து 141 பேரும் தோ்வாகியுள்ளனா்.
இதில் குறிப்பாக, சென்னை சங்கா் ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி மையத்திலிருந்து 95 போ் உள்பட, சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்ற 495-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான நோ்முகத்தோ்வு தில்லியில் நடைபெறவுள்ளது.
இதற்காக, சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்துப் பயிற்சி மையங்களிலும் மிகச்சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மற்றும் தலைசிறந்த பேராசிரியா்களையும் கொண்டு மாதிரி நோ்முகத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதில் நோ்முகத் தோ்வை எதிா்கொள்ளும் அனைத்துப் போட்டியாளா்களும் இலவசமாக பங்கேற்கலாம்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு interview@shankarias.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 63797 84702, 90030 73321 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.