போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தனி அலைவரிசை
மத்திய
மற்றும் மாநில அரசு
பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வில் பங்கேர்போருக்கு முக்கிய
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய
மாநில அரசு துறைகளில்
உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு
சார்பில் பல்வேறு போட்டி
தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய குடிமைப்பணி தேர்வு,
இந்திய பொறியாளர் பணி
தேர்வு, மற்றும் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள்
நடைபெற்று தேர்வில் வெற்றி
பெறுவோருக்கு பணி
நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த
வகையில் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழர்களின் பங்கு அதிக அளவு
இருக்க வேண்டும் என
தமிழக அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்
ஒரு பகுதியாக ஏற்கனவே
போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு அரசு சார்பில் இலவச
பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோல்
தற்போது தேர்வுக்கு தயாராகும்
போட்டியாளர்களுக்கு தனி
அலைவரிசை ஏற்படுத்தப்படும் என
கல்வி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்காக
தமிழக அரசு 50 லட்சம்
நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த செய்தி போட்டி
தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.