HomeBlogகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
- Advertisment -

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

Semester exam postponement for college students

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா
காரணமாக பள்ளி மற்றும்
கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி
மாணவர்களுக்கு ஆன்லைன்
மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது.

தற்போது
கொரோனா பாதிப்பு குறைந்த
நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும்
கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு
கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி
செமஸ்டர் தேர்வு நடைபெறும்
என்று உயர் கல்வித்
துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால்
கடந்த சில நாட்களாக
மீண்டும் கொரோனா பாதிப்பு
அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து
கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி
20
ம் தேதி வரை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 21ம் தேதி
தொடங்க இருந்த செமஸ்டர்
தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா
பரவலை கருத்தில் கொண்டு
மீண்டும் தேர்வு எப்போது
நடத்தப்படும் குறித்து
ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -