மத்திய ஆயுதப்படைக்கு காவலர்கள் தேர்வு
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய
ஆயுதப்படை போலீஸ் (சி.ஆர்.பி.எப்.,),
என்.ஐ.ஏ.,
எஸ்.எஸ்.எப்.,ல்
கான்ஸ்டபிள், அசாம் ரைபிள்ஸில் ரைபிள்மேன் என 22,424 காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வு
மூலம் நிரப்பப்பட உள்ளது.
தில்
10 சதவீதம் முன்னாள் படை
வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் படிப்பு
அல்லது அதற்கு இணையான
பத்தாம் வகுப்பு தேர்வு
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்
அல்லது பல்கலைக்கழகம் மூலம்
முடித்திருக்க வேண்டும்.
நடப்பு ஆண்டு ஆகஸ்ட்
1-ந்தேதி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வரும் 31-ந்தேதிக்குள் இணையதளம்
வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற
இணையதள முகவரியையும், மாவட்ட
முன்னாள் படைவீரர்கள் நல
அலுவலகத்தை 0421-4971127 என்ற
எண்ணிலும், exweltup@tn.gov.in என்றஇ–மெயில்
மூலமும் தொடர்பு கொள்ளலாம்.