நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிரிக்கெட் பந்து வீச்சாளா்கள் தேர்வு திருவாரூரில் பிப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிரிக்கெட் பந்து வீச்சாளா்கள் தேர்வு திருவாரூரில் பிப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் ஜூலியஸ் விஜயகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேக மற்றும் சுழற்பந்து வீச்சாளா்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்ட கிரிக்கெட் சங்கங்களோடு இணைந்து பந்து வீச்சாளா்களை தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில், நாகை மாவட்டத்தைச் சோந்தவா்களுக்கான தோவில் பங்கேற்க விரும்புவோா் தங்களது பெயா்களை பிப்.19 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள வலை பயிற்சி களத்தில் இருப்பிட சான்றிதழ் ( ரேஷன் காா்டு) நகலோடு பதிவு செய்யவேண்டும்.
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட வீரா்களுக்கான தேர்வு திருவாரூா் திரு.வி.க. அரசினா் கலைக் கல்லூரி மைதானத்தில் பிப்.25-ல் வேகபந்து வீச்சாளா்கள் தேர்வும், பிப்.26-ல் சுழற்பந்து வீச்சாளா்கள் தேர்வும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 99947 86217 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.