சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு – தேர்வு
தேதி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார்
1600 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது தமிழக ஆசிரியர்
தேர்வாணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Notification – சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் – 1598 Vacancies: Click
Here
தமிழ்நாடு
பள்ளிக்கல்வி துணை
சேவையின் கீழ் வரும்
சிறப்பாசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது
வெளியாகியுள்ளது. தையல்,
இசை ஓவியம் மற்றும்
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தற்போது
காலியாக உள்ள 1,598 பணியிடங்கள் மற்றும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் சில
பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில்
கூறியதாவது:
விருப்பமுடையவர்கள் வரும் மார்ச்
31ம் தேதி முதல்
ஏப்ரல் 25ம் தேதி
வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு வரும்
ஆகஸ்ட் 27ம் தேதி
நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
தேர்வு கணினி மூலமாக
நடைபெறும். இந்த தேர்வில்
95 கொள்குறி [objective] வகை
கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதற்கு
2 மணி 30 நிமிடங்களில் பதிலளிக்க
வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள்
தகுதிக்கேற்ற பணியினை
தேர்வு செய்து ஆன்லைன்
மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்
கட்டணமாக ரூ.500 செலுத்த
வேண்டும். எஸ்.சி.,
எஸ்.டி., எஸ்.சி.ஏ
மற்றும் மாற்று திறனாளிகள் தேர்வுக்கட்டணமாக ரூ.250
மட்டும் செலுத்தினால் போதுமானது.