பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் 531 இளநிலை பொறியாளர்
பணியிடங்களுக்கு தேர்வு – TNPSC
பொதுப்பணி,
நெடுஞ்சாலைத்துறையில் காலியாக
உள்ள 531 இளநிலை பொறியாளர்
பணியிடங்களுக்கு ஜூன்
6ம் தேதி தேர்வு
நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.
தமிழக
நெடுஞ்சாலைத்துறையில் 813, பொதுப்பணித்துறையில்
348 இளநிலை வரை தொழில்
அலுவலர் பணியிடங்கள், கைத்தறி
மற்றும் டெக்ஸ்டைல் துறையில்
இளநிலை தொழில்நுட்பட உதவியாளர்
ஒரு பணியிடம், மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர்
5 பணியிடங்களுக்கு தேர்வு
நடத்த தமிழ்நாடு அரசு
தேர்வாணையம் (TNPSC) கடந்த
5ம் தேதி அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் ஏப்ரல்
4ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
இளநிலை
வரை தொழில் அலுவலர்,
இளநிலை பொறியாளர் பணிக்கு
டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து இருக்க வேண்டும்
அல்லது மத்திய அரசின்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் படித்து
இருக்க வேண்டும். விண்ணப்ப
கட்டணம் Rs.150/-.
எஸ்சி,
எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள்
பிரிவினருக்கு கட்டண
விலக்கு.
இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் ஜூன்
6ம் தேதி எழுத்து
தேர்வு நடைபெறுகிறது. இந்த
தேர்வு சென்னை, மதுரை,
கோவை, திருச்சி, நெல்லை,
சேலம், தஞ்சாவூர் ஆகிய
7 மையங்களில் நடைபெறுகிறது.