TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
பத்தாம்
வகுப்பு தோல்வி, 10ஆம்
வகுப்பு தேர்ச்சி மற்றும்
அதற்கு மேலான கல்வி
தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து, அந்தப் பதிவை
தொடர்ந்து புதுப்பித்து கடந்த
ஜூன் 30 வரையுள்ள நிலையில்
5 ஆண்டுகளுக்கு மேலாக
வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக
அரசு உதவித்தொகை வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து ஓராண்டு முடித்திருந்தால் மட்டும் போதும்
.தமிழகம் முழுவதும் அனைத்து
மாவட்டங்களிலும் இதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படிசேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட
தொழில்நெறி வழிகாட்டுதல் அலுவலகம்
சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதன் மூலம் பத்தாம்
வகுப்பு முடித்த அனைத்து
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நேரில் அல்லது https://employmentexchange.tn.gov.in/
என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அதன்படி
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த
வேலையற்ற இளைஞர்கள் மற்றும்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 72,000 க்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பில் தோல்வி
அடைந்தவர்களுக்கு 200 ரூபாய்
உதவி தொகையும், பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய் உதவி தொகையும்,
பன்னிரண்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய்,
பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களது
வேலைவாய்ப்பு அடையாள
அட்டையை மாவட்ட வேலைவாய்ப்பு மட்டும் தொழில்நெறி வழிகாட்டு
மையம் அலுவலகத்தில் காண்பித்த
விண்ணப்பங்களை பெற்றுக்
கொள்ளலாம்.
மேலும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ம்
தேதிக்குள் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow