TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை
– தேனி
தமிழகத்தில் 10 மற்றும் அதற்கு மேல்
படித்துள்ள ஒவ்வொரு இளைஞர்களும் வேலைவாய்ப்புக்காக, ஒவ்வொரு
மாவட்டத்தில் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களை பதிவு செய்வது
வழக்கம்.
அந்த
வகையில் வேலைவாய்ப்புக்காக பதிவு
செய்து தகுந்த வேலைக்காக
காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகையை வழங்கி
வருகிறது.
இப்போது,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக
வேலை இல்லாமல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித் தொகைக்கு
விண்ணப்பிக்கலாம் என்று
தேனி மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:
தேனி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு அரசு
உதவித் தொகையை வழங்கி
வருகிறது. அந்த வகையில்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.2022 நிலவரப்படி 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல்
இருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை செலுத்தலாம்.
அதன்படி
10ம் வகுப்பில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு
காலாண்டுக்கும் ரூ.600,
10ம் வகுப்பில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.900
வழங்கப்படுகிறது.
அதே
போல, 12ம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,200
மற்றும் பட்டப்படிப்பு மற்றும்
முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,800 உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி
அல்லது அதற்கு கீழ்
தகுதி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு
காலாண்டுக்கும் ரூ.
1,800 மற்றும் 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2,250
மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.3,000
என்ற அடிப்படையில் பத்து
வருடங்களுக்கு நிதியுதவி
அளிக்கப்படுகிறது.
இப்போது
இத்திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெற 30.06.2022ம்
தேதிப்படி, 45 வயதிற்கு மேல்
இல்லாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் 40 வயதிற்கு மிகாமலும்
இருக்கும் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம்
ஆண்டுக்கு ரூ.72,000க்கு
அதிகமாக இருக்க கூடாது.
ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு
வருமானம் தேவையில்லை.
குறிப்பாக,
பொறியியல், மருத்துவம், விவசாயம்,
கால்நடை மருத்துவம், சட்டம்
முடித்த பட்டதாரிகள் இந்த
உதவித்தொகையை பெற
முடியாது.
இப்போது
இந்த நிதியை பெறுவதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம்.
மேலும்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு
விண்ணப்பங்களை பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here