HomeBlogதமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை
- Advertisment -

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

 

Scholarship for Tamil Nadu Government School students

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழகத்தில் CORONA.வின் இரண்டாவது
அலை மிக வேகமாக
பரவி வருகிறது. இதன்
காரணமாக தற்போது நேரடி
பள்ளி மற்றும் கல்லூரி
வகுப்புகள் நடைபெறுவதில் சிக்கல்
ஏற்பட்டது. மேலும் மாணவர்கள்
நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள்
கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சில மாணவர்கள்
பொருளாதார பிரச்சனை காரணமாக
தங்களது உயர்கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்படும்.

அந்த
மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது
அகரம் அறக்கட்டளை. இந்த
அறக்கட்டளையை நடிகர்
சூர்யா நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளையால் பல
மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும்
பல மாணவர்கள் தங்களது
உயர்படிப்பினை எந்தவொரு
சிரமமுமின்றி படித்து
வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சேலம் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்
கணேஷ்மூர்த்தி தலைமை
ஆசிரியர்களுக்கு ஓர்
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில்
கூறியுள்ளதாவது:

மாணவர்கள்
தங்களது உயர்படிப்பினை சிரமமின்றி படிப்பதற்கு அகரம் அறக்கட்டளை கல்வி உதவி திட்டத்தில், 2020-2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி கனவை நினைவாக்குவதற்கு தகுதி பெற்ற
மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -