HomeBlogTNPSC குரூப் 1.ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை தாமதம்
- Advertisment -

TNPSC குரூப் 1.ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை தாமதம்

Scholarship delay for those who have passed TNPSC Group 1.

TNPSC குரூப் 1.ல்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை தாமதம்

குரூப்
1
தேர்வு தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்
நடத்தப்படுகிறது. இதில்
மூன்று கட்ட தேர்வுகள்
நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் முதல் கட்ட
தேர்வு (Preliminary Examination), இறுதி
தேர்வு (Main Written Examination), வாய்வழி
சோதனை (Oral Test) ஆகிய
தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான தகுதித்தேர்வு நடந்து அதில் தேர்ச்சி
பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குரூப்
1
தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு அரசின்
சார்பில் உதவித்தொகை வழங்கப்படும். அதிலும், அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ
மூலம் உதவித்தொகை வழங்கப்படும். இந்தாண்டுக்கான தகுதித்தேர்வுகள் பல மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்து விட்டது.
இருப்பினும் மாணவர்களுக்கு வழங்கப்பட
வேண்டிய உதவித்தொகை கிடைக்காததால் அம்பேதகர் மக்கள் இயக்க
செயல் தலைவர் இளமுருகன்
செய்தியாளர்கள் மூலம்
அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

குரூப்
1
தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்ற மாணவர்கள் தாட்கோ
இணையதளத்தில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முயன்றால்,
தற்போது விண்ணப்பிக்க இயலாது
என்ற செய்தி மட்டுமே
வருகிறது. தமிழக அரசின்
உத்தரவுக்காக காத்திருப்பதாக அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால்
ஆயிரக்கணக்காக மாணவர்கள்
பாதிக்கப்படுகின்றனர். எனவே
தமிழக அரசு தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -