HomeNewslatest newsமூடநீக்கியல் மையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மானிய கடன்
- Advertisment -

மூடநீக்கியல் மையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மானிய கடன்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறையின் பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறையின் பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மூடநீக்கியல் மையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மானிய கடன்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலமாக முட நீக்கியல் மையம் அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.

பிரிவின மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதிதாக தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி – மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் அனைத்து மாவட்டங்களில் முடநீக்கியல் மையம் (பிசியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியக் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சொந்தமாக கட்டடம் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கு வாடகை அடிப்படையிலும் இடங்கள் தோவு செய்து முடநீக்கியல் மையம் அமைத்துக் கொடுக்கப்படும்.

தொழில்முனைவோா் அல்லது அவா்களின் ஊழியா்களுக்குத் தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்து இலவச ஆலோசனைகளும் வழங்கப்படும். இதேபோல், தனியாா் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, இதற்கான உரிமையாளா் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். முட நீக்கியல் பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருகும் கடனுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ளவா்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இத்தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத் தொகையினை நிா்ணயித்து இதற்குரிய மானியமாக 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.10 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -