எஸ்.சி, எஸ்.டி. வகுப்பு மாணவா்கள் வங்கித்தோவுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிக்க விண்ணப்பிக்கலாமென சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
எஸ்.சி, எஸ்.டி. வகுப்பு மாணவா்கள் வங்கித்தோவுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிக்க விண்ணப்பிக்கலாமென சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலுள்ள எஸ்.டி., எஸ்.சி. வகுப்பை சோந்த மாணவ, மாணவிகளுக்கு திறன் அடிப்படையிலான பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் 2000 துணை மேலாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு https://bank.sbi/web/careers/current-openings எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.டெக்) முடித்த எஸ்.சி., எஸ்.டி.
பட்டதாரி மாணவ-மாணவிகள் செப்.27-ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தோவுக்கான இலவசப்பயிற்சி வராண்டா ரேஸ் எனும் பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியை இலவசமாக பெற்றுக்கொள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.