இந்த வருடம் SBI வெளியிட்ட அறிவிப்பில் PO பதவிக்கு 1673 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது முதல்நிலை தேர்வு அதாவது Prelims தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு 17 முதல் 20 டிசம்பர் வரை நடக்க உள்ளது.
SBI PO Hall Ticket பதிவிறக்கம் செய்யும் முறை:
- முதலில் SBI-இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
- அதில் careers பக்கத்தில் SBI PO லிங்கை கிளிக் செய்யவும்
- தற்போது ஹால் டிக்கெட் லிங்கை கிளிக் செய்யவும்
- உங்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிடவும்
- தற்போது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவும்