SBI அப்ரண்டிஸ் 2024 தேர்வு முடிவு
SBI வங்கியில் காலியாக உள்ள Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 6160 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது 01.09.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் மொழித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணிக்கான SBI Apprentices எழுத்து தேர்வானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4, 7 மற்றும் 23ம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் 100 மதிப்பெண்களுக்கு 02 மணி நேரம் நடத்தப்பட்டது.
தற்போது இத்தேர்வின் முடிவுகள் https://sbi.co.in/careers என்ற இணையதள முகவரியில் நேற்று (26.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 78 முதல் 83 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நபர்கள் அடுத்த கட்டணமாக மொழி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்களுக்கு மொழி தேர்வுக்கான அழைப்பானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow