இந்திய குடிமைப் பணித் தேர்வை 2025 ஆம் ஆண்டு எழுதுபவர்களுக்கான இலவச கருத்தரங்கம் சர்கார் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நடைபெறவுள்ளது.
சர்கார் ஐ.ஏ.எஸ். அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சர்கார் ஐ.ஏ.எஸ்.அகாதெமி சார்பில் குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சியை மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுடன் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப் பணிதேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை 10 முதல் பகல் 1 மணி வரை இந்த கருத்தரங்கம் நடைபெறும்.
இதில் ‘குடிமைப் பணித் தேர்வில் மாறிவரும் போக்குகளை புரிந்து கொள்ளுதல்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி ஜிபி ஆர்.நட்ராஜ் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து, கடந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பாடவாரியாக துறைசார் வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் “FREE SEMINAR FOR UPSC – 2025@SARKAR” என்று 9962600039 எனும் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow