Monday, December 23, 2024
HomeBlogதமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – கூட்டுறவுத்துறை செயலாளர்
- Advertisment -

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – கூட்டுறவுத்துறை செயலாளர்

 

Salary increase for Tamil Nadu ration shop employees - Co-operative Secretary

தமிழ்நாடு ரேஷன்
கடை ஊழியர்களுக்கு சம்பள
உயர்வுகூட்டுறவுத்துறை செயலாளர்

தமிழகத்தில் உள்ள நியாய விலை
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ்
உள்ள நியாயவிலை கடைகளில்
பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவது குறித்து
பரிந்துரைகளை தமிழக
அரசிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அளித்திருந்தார். தற்போது
அந்த பரிசீலனையை தமிழக
அரசு ஏற்றுக்கொண்டு உத்தரவு
பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல்
தலைமை செயலாளர் தயானத்
கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பின் படி, கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள நியாயவிலை
கடைகளில் புதிதாக சேர்ந்த
பணியாளர்களுக்கு ஓராண்டு
மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். மேலும் விற்பனையாளர்களுக்கு இப்போது
அளிக்கப்படும் ரூ.5000
தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு ரூ.6250 ஆக வழங்கப்படும். கட்டுநர்களுக்கு இப்போது
வழங்கப்பட்டு வரும்
ரூ.4250 தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு ரூ.5500 ஆக வழங்கப்படும்.

அதே
போல ஓராண்டு முடிவடைந்த பணியாளர்களுக்கு காலமுறை
ஊதியம் வழங்கப்படும். அதன்படி
விற்பனையாளர்களுக்கு ரூ.8600
முதல் ரூ.29000 வரையும்,
கட்டுநர்களுக்கு ரூ.7800
முதல் ரூ.26000 வரை
உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும்
இந்த புதிய ஊதிய
தொகையில் 14 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

மேலும்
இவர்களுக்கு புதிய ஊதிய
உயர்வின் படி அடிப்படை
ஊதியத்தில் 2.5% இருந்து 3% ஆக
உயர்த்தி அளிக்கப்படுகிறது. சென்னை
மாநகரில் வசிப்போருக்கு வாடகைப்
படியாக அடிப்படை ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அல்லது
ரூ.1200 வழங்கப்படும். மேலும்
சென்னை மாநகரில் வசித்து
வருபவர்களுக்கு நகர
ஈடுபடியாக அடிப்படை ஊதியத்தில் இருந்து 5 சதவிகிதம் அல்லது
ரூ.600 மற்றும் மற்ற
பகுதி ஊழியர்களுக்கு 4 சதவிகிதம்
அல்லது ரூ.500 வரை
வழங்கப்படும்.

மேலும்
அந்தந்த பகுதிகளில் உள்ள
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படி வழங்கப்படுகிறது. 1000 அட்டை மற்றும்
அதற்கு கீழ் உள்ள
கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ரூ.1000, கட்டுநர்களுக்கு ரூ.500 வரை வழங்கப்படும். 1500 குடும்ப அட்டை
அதிகமாக உள்ள கடைகளில்
பணிபுரிந்து வருபவர்களுக்கு ஏற்கனவே
வழங்கப்பட்ட படியுடன் 25% கூடுதலாக
வழங்கப்பட உள்ளது.

மேலும்
மலைப்பகுதிகளில் உள்ள
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.1500 படியாகவும், மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு போக்குவரத்து படியாக
ரூ.2500 வழங்கப்படுகிறது. திருத்தம்
செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதன்
பணபயன்கள் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்கான செலவுகளை
கூட்டுறவுத் துறையே ஏற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -