இன்று முதல்
ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
கடந்த
ஆண்டு உலகம் முழுவதும்
இருண்ட வருடம் என்று
தான் சொல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு CORONA வைரஸ் பரவி மக்களை
துன்புறுத்தி பல
இன்னல்களுக்கு உள்ளாக்கியது. இதனால் பலர் தங்களது
வேலையை இழந்தனர். கடந்த
ஆண்டு எந்த தொழில்
துறையும் நடக்காத காரணத்தினால் நாட்டின் பொருளாதாரம் சரிவை
கண்டது. பின்பு கடந்த
ஆண்டு இறுதி முதல்
நாட்டில் அனைத்து தரப்பு
தொழில்களும் துவங்கப்பட்டு நடந்து
வருகிறது.
மேலும்
வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சி
அடையும் என்று பொருளாதார
வல்லுநர்கள் தெரிவித்தனர். அதற்கு
ஏற்றார் போல் தற்போது
நாட்டில் அனைத்து தரப்பு
தொழில்களும் மிக சிறப்பாக
நடந்து பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது. தற்போது நிறுவனங்களின் கவனம் ஊழியர்களின் பக்கம்
சென்றுள்ளது. இதன் காரணமாக
ஊழியர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த மார்ச்
மாதம் 18ம் தேதி
அசெஞ்சேர் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது.
அதன்படி
ஒரு மாத அடிப்படை
சம்பளத்தை ஊழியர்களுக்கு போனசாக
வழங்கியது. தற்போது இதனை
தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனமும் நடப்பு நிதியாண்டு (ஏப்ரல்
1) முதல் ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு இருக்கும் என்று
தெரிவித்தது. அதன்படி டிசிஎஸ்
ஊழியர்களுக்கு 12% முதல்
14% வரை சம்பள உயர்வு
இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.