செல்லாத பணம்
நாவலுக்கு சாகித்ய அகாடமி
விருது
சிறந்த
இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, மத்திய அரசால்
ஒவ்வொரு ஆண்டும் தேசிய
அளவிலும், மாநில அளவிலும்
வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாக சாகித்ய அகாடமி
விருது உள்ளது. இந்த
விருதை பெறுபவர்களுக்கு பரிசாக
ரூ.1 லட்சமும், ஒரு
பட்டயமும் வழங்கப்படும். நாடு
முழுவதும் 24 மொழிகளுக்கு சிறுகதை,
நாவல், இலக்கிய விமர்சனம்
போன்றவற்றிற்காக சாகித்ய
அகாடமி விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் வெ.அண்ணாமலை அவர்கள்
இமையம் என்ற புனைபெயரில் உள்ள மிகவும் பிரபலமான
எழுத்தாளர் ஆவார். கோவேறு
கழுதைகள் என்ற நாவலின்
மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானார். இவர் தமிழ் நாட்டுப்புற வட்டார வழக்குகளில் நாவல்களை
உருவாகும் மிகவும் முக்கியானவர்.
எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய
பெத்தவன் என்ற நாவல்
சிறுகதையாகவும், குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. மேலும்
செடல், வீடியோ மாரியம்மன், சாவு சோறு போன்றவை
அதிகம் புகழ் பெற்ற
நாவல்கள் ஆகும். இவர்
அண்மையில் எழுதிய ‘செல்லாத
பணம்’ என்ற நாவலுக்கு
2021ம் ஆண்டுக்கான தமிழில்
சிறந்த நாவலுக்கான சாகித்ய
அகாடமி விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.