Join Whatsapp Group

Join Telegram Group

இந்தியா போஸ்டில் ஆண்டுக்கு ரூ.755 இருந்தால் போதும் ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும்

இந்தியா போஸ்டில் ஆண்டுக்கு ரூ.755 இருந்தால் போதும் ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும்
இந்தியா போஸ்டில் ஆண்டுக்கு ரூ.755 இருந்தால் போதும் ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மக்களுக்கான ஒரு நல்ல சலுகையை வழங்கியுள்ளது. இன்சுரன்ஸ் தொடர்பான புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

விபத்து காப்பீட்டு திட்டம் போடுவதில், பலருக்கும் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அந்த திட்டம் மலிவு பிரீமியத்தில் கிடைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். அந்த சலுகைதான் இந்த வங்கியில் கிடைக்கிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் தனிநபர் விபத்துக் காப்பீடு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் ஆகும்.

பொதுவாக தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசிகளின் காலம் ஒரு வருடம் வரை இருக்கும். பின்னர் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதாவது மீண்டும் பிரீமியம் செலுத்தினால் பாலிசி புதுப்பிக்கப்படும். சில வங்கிகளில் ஆட்டோ புதுப்பித்தல் விருப்பமும் உள்ளது.

18 முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுக் கொள்கைகளைத் தேர்வு செய்யலாம். ஹெல்த் பிளஸ் திட்டத்தில் மூன்று விருப்பங்கள் உள்ளன.

ஆப்ஷன் 1:

  • இந்த பாலிசியில் உறுதியளிக்கப்பட்ட தொகை ரூ. 5 லட்சம். பாலிசிதாரரின் விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு 100 சதவீத காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் காப்பீட்டு தொகையாக ரூ.25,000 கிடைக்குமாம். இந்த பாலிசிக்கு நீங்கள் ஆண்டுக்கு ரூ.355 செலுத்தினால் போதுமானது.

ஆப்ஷன் 2 :

  • இந்த பாலிசியில் உறுதியளிக்கப்பட்ட தொகை ரூ. 10 லட்சமாகும். திடீர் விபத்தில் மரணம் அல்லது விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு 100 சதவீத காப்பீட்டு தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், 25,000 ரூபாய் வழங்கப்படுமாம்.
  • இறுதியில் தகனச் செலவு சுமார் ரூ. 5,000 பெறலாம். மேலும், இறந்தவரின் குழந்தைகள் கல்விக்காக ரூ. 50,000 கிடைக்கிறது. இந்த பாலிசிக்கு நீங்கள் ஆண்டுக்கு ரூ.555 செலுத்த வேண்டும்.

ஆப்ஷன் 3:

  • இந்த பாலிசியில் உறுதியளிக்கப்பட்ட தொகை ரூ. 15 லட்சமாகும். திடீர் மரணம் அல்லது விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு 100 சதவீத காப்பீட்டு தொகையும் வழங்கப்படுகிறது. இறந்தவரின் குழந்தைகளின் திருமணத்திற்கு ரூ. 1 லட்சமும், உடைந்த எலும்புகளுக்கு ரூ. 25,000 வரை கிடைக்குமாம். இந்த பாலிசிக்கு நீங்கள் ஆண்டுக்கு ரூ.755 செலுத்த வேண்டும்.

மேலும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் திட்டத்தின் கீழ், நீங்கள் தொலை தூர ஆலோசனைகள், வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் மற்றும் பிற நன்மைகளையும் பெறலாம். எந்தவொரு இன்ஷூரன்ஸ் பாலிசியையும் வாங்குவதற்கு முன் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது சிறந்ததாகும்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment