தொழில் முனைவோருக்கு ரூ. 4,000 உதவித்தொகை
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில்
மேலாண்மைப் பயிற்சிகள் தகுதியான
நிறுவனங்கள் மூலம் அனைத்து
மாவட்டங்களிலும் பயிற்சி
வழங்க தமிழக அரசு
அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-2022ஆம்
ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான பொருளாதார
மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவு
ஏற்படுத்தி தரும் வகையில்
கடன் பெற 5,000 தொழில்
முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை
ஊக்கப்படுத்தும் வகையில்
அவர்களுக்கு மாவட்ட அளவில்
ஏழு நாள்கள் தொழில்
மேலாண்மை பயிற்சிகள் தகுதியான
நிறுவனங்கள் மூலம் இரண்டு
கோடி ரூபாய் செலவில்
அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி,
ஆதி திராவிடர் இனத்தைச்
சேர்ந்த 4,500 தொழில் முனைவோர்,
பழங்குடியினர் இனத்தைச்
சேர்ந்த 500 தொழில் முனைவோர்
உள்ளிட்ட, 5000 தொழில் முனைவோரை
தேர்வு செய்து, ஒரு
தொழில் முனைவோருக்கு 4,000 ரூபாய்
வீதம் (பயிற்சி நிறுவனத்திற்கு 3400 ரூபாய், தொழில்
முனைவோருக்கு உதவித்தொகை 500 ரூபாய்),5000 தொழில் முனைவோருக்கு 2 கோடி ரூபாய் செலவில்
தாட்கோ மூலம் தொழில்
மேலாண்மைப் பயிற்சி அளிக்க
நிர்வாக ஒப்புதல் வழங்கி
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.