தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.4000
நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் CORONA நோய்த்தொற்று பாதிப்பு
நாளுக்கு நாள் புதிய
உச்சத்தை அடைந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு
சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (மே 6) முதல்
பிற்பகல் 12 மணிக்கு மேல்
கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இன்று
தமிழகத்தின் புதிய முதல்வராக
பதவி ஏற்று உள்ள
முக ஸ்டாலின் அவர்களின்
மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. தேர்தல்
வாக்குறுதியில் அளிக்கப்பட்ட திட்டத்தில் முதலாவதாக எதை
அமல்படுத்துவார் என்கிற
கேள்வி எழுந்தது.
அதற்கு
தற்போது விடை கிடைத்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின்
அவர்கள் முதலாவதாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார்.
அதில் முக்கியமானதாக தமிழக
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000
நிவாரணம் அளிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் கலைஞர் கருணாநிதி
அவர்களின் பிறந்தநாளான ஜூன்
3 அன்று தொடங்கப்படும் என
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த
நிலையில், மே மாதமே
ரூ.2000 வழங்கப்படும் என
கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2.07 கோடி குடும்ப
அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39
கோடி செலவில் நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது. இம்மாதமே
முதல் தவணை ரூ.2000
வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி ஆவின்
பால் விலை குறைப்பு,
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.