HomeBlogதமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் – அரசுக்கு கோரிக்கை
- Advertisment -

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் – அரசுக்கு கோரிக்கை

Rs. 10 thousand for Tamil Nadu family card holders - Request to the government

தமிழக குடும்ப
அட்டைதாரர்களுக்கு ரூ.10
ஆயிரம்அரசுக்கு கோரிக்கை

CORONA பரவல் தமிழகத்தில் உச்சம்
தொட்டு வருகிறது. நோய்
பரவல் அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து
தொற்று பாதித்தவர்கள் உயிரிழப்பதும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்றால் அதிகம்
பாதித்த மாநிலங்களில் தமிழகமும்
ஒன்றாக இருந்து வருகிறது.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை
23,000
கடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சட்ட மன்ற
தேர்தல் முடிவுகள் மே
2
தேதி வெளி வந்தது.
கடந்த 10 வருடங்களுக்கு பிறகு
திமுக அமோக வெற்றி
பெற்றது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின்
அவர்கள் தமிழக முதலமைச்சராக வருகின்ற மே 7ம்
தேதி பதவியேற்க உள்ளார்.
அவர் தேர்தலின் போது
பல வாக்குறுதிகளை அளித்தார்.
அதில் எதை முதலில்
அமல்படுத்துவார் என்ற
எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த
CORONA பரவல் சூழ்நிலையில் பதவியேற்க உள்ள முதல்வர்
ஸ்டாலின் அவர்களுக்கு கோவையை
சேர்ந்த மருத்துவர் ஹரிஹரன்
கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அவர்
கூறுகையில்:

CORONA வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உடனடியாக தமிழகத்தில் ஊரடங்கை
அமல்படுத்த வேண்டும் எனவும்
மீண்டும் தளர்வுகள் அறிவிக்கும் வரை நிவாரண நிதியாக
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்
ரூ.10,000 வழங்க வேண்டும்
எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -