மத்திய அரசின்
அகவிலைப்படி உயர்வு – ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்
கடந்த
ஆண்டு CORONA நோய்த்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரமே கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. பொதுமுடக்கம் காரணமாக
நாட்டில் எந்த துறையும்
முறையாக இயங்கவில்லை. இதுவே
நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்வதற்கு அரசு
பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி
கடந்த ஆண்டு ஜனவரி
மாதம் முதல் மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பாலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது நாட்டின்
பொருளாதாரம் சீரடைந்து வருகிறது.
இதன் காரணமாக மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வருகிற ஜூலை மாதம்
1ம் தேதி முதல்
வழங்குவதற்கு அரசு
முடிவு செய்தது.
அதன்படி
கடந்த 2020 ஜனவரி மாத
அகவிலைப்படி உயர்வில் 4%, 2020 ஜூலை
மாத 3% மற்றும் 2021 ஜனவரி
மாத 4% என மொத்தமாக
28% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். தற்போது DA உயர்வதால் இதனுடன்
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DR தானாக அதிகரிக்கும். DA மற்றும்
DR ஒரே சதவிகிதத்தில் அதிகரிக்கும். DR அதிகரிக்கும் காரணமாக
ஓய்வூதியதாரர்களுக்கு அதிகமான
அளவில் பலன்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.